கடனாளிகளான இலங்கை நாட்டு மக்கள் : ஒருவருக்கு எவ்வளவு தொகை தெரியுமா ? - News View

About Us

About Us

Breaking

Saturday, September 23, 2023

கடனாளிகளான இலங்கை நாட்டு மக்கள் : ஒருவருக்கு எவ்வளவு தொகை தெரியுமா ?

நாடு பெற்ற கடனை மக்கள் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஒவ்வொரு பிரஜையும் கடனாளியாகியுள்ளதாகவும் எவ்வளவு ரூபாவுக்கு கடனாளிகளாக்கப்பட்டுள்ளார்கள் என்பதும் ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான ஆய்வை பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார விஞ்ஞானம் மற்றும் புள்ளிவிபர கற்கைப் பிரிவின் பேராசிரியர்களான வசந்த அத்துக்கோரள மற்றும் தயாரத்ன பண்டா ஆகியோர் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.

அந்த ஆய்வின்படி, கடந்த ஏப்ரல் வரையான காலப்பகுதி வரை நாடு பெற்ற கடனில் தனி நபர் ஒருவர் 11 இலட்சத்து 81 ஆயிரம் ரூபாவை செலுத்த வேண்டிய கடனாளியாக மாறியுள்ளார்.

இதேவேளை, நான்கு பேர் கொண்ட குடும்பமொன்று 47 இலட்சத்து 24 ஆயிரம் ரூபாவை கடனாக செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 2020ஆம் ஆண்டில் 6 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாவாக காணப்பட்ட தனி நபர் கடன் தொகை இவ்வாண்டு ஏப்ரல் மாதமாகும் போது 4 இலட்சத்து 9 ஆயிரம் ரூபாவால் அதிகரித்து 11 இலட்சத்து 81 ஆயிரம் ரூபாவாக காணப்படுகிறது.

No comments:

Post a Comment