பல்கலைக்கழக மாணவி தூக்கிட்டு தற்கொலை - News View

About Us

About Us

Breaking

Sunday, September 17, 2023

பல்கலைக்கழக மாணவி தூக்கிட்டு தற்கொலை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவி ஒருவர் நேற்று (17) கிளிநொச்சி கோனாவில் பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் பழைய மாணவியான வசந்தகுமார் டீலக்சியா என்ற 22 வயதுடைய மாணவியே இவ்வாறு வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்

அவரது சகோதரர் வீட்டிற்கு வந்தபோது, ​​​​குறித்த மாணவி வீட்டில் தூக்கிட்டு இருந்த நிலையில் சகோதரனால் மீட்கபட்டு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழக்கும் அளவுக்கு மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பது தனக்கு தெரியாது என உயிரிழந்த மாணவியின் சகோதரர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment