கல்விக் காலத்தை ஓராண்டு குறைத்தால் முன்னதாக பட்டப்படிப்பை பெற முடியும் - பிரதமர் தினேஷ் - News View

About Us

About Us

Breaking

Sunday, September 17, 2023

கல்விக் காலத்தை ஓராண்டு குறைத்தால் முன்னதாக பட்டப்படிப்பை பெற முடியும் - பிரதமர் தினேஷ்

உரிய காலத்தில் பரீட்சைகளை நடத்தி, உரிய காலத்திலேயே பெறுபேறுகளை வழங்க வேண்டுமென பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

கல்விக் காலத்தை ஓராண்டு குறைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதனைச் செய்ய முடியுமாக இருந்தால், எமது பிள்ளைகள் ஒரு வருடம் முன்னதாகவே பட்டப்படிப்பை முடித்து, பல்வேறு துறைகளுக்கும் செல்ல முடியும். அந்தச் சவாலை நாம் வெற்றி கொள்ள வேண்டுமென்றும் பிரதமர் தெரிவித்தார்.

விசாகா கல்லூரியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் (15) கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். 

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர், ஒரு கல்லூரியை விட்டு வெளியேறி, உலகளாவிய அறிவை அணுகுவதற்கான மையமாக இருக்கும் பல்கலைக்கழகத்திற்குச் செல்கிறோம். இதன் மூலம் நாட்டிற்கு பல நன்மைகளை சேர்க்கிறோம். அதனால்தான் கல்லூரிக்கும் பல்கலைக்கழகத்துக்கும் இடையே வித்தியாசம் இருக்கிறது.

மாணவிகளாக, நீங்கள் ஒரு கடினமான காலத்தை கடந்து வந்துள்ளீர்கள். அண்மைய காலங்களில், நாடு மிகவும் கடினமான காலத்தை எதிர்கொண்டது. இப்போது நாம் மீண்டும் எழுந்து நிற்கும் நாடாக இருக்கிறோம். அறிவை வழங்கும் துறைகளை விரிவுபடுத்துவதற்கான வலுவான அர்ப்பணிப்பும், பல புதிய துறைகளும் உருவாகியுள்ளன. நீங்கள் பெரிய பதவிகளுக்கு சென்று நாட்டுக்கு சேவை செய்யலாம்.

எங்களைப் போலவே, பெற்றோர்களும் பாடசாலைக்குச் செல்லும் பிள்ளைகளும், உரிய நேரத்தில் பரீட்சைகள் நடத்தப்பட வேண்டும், உரிய நேரத்தில் பெறுபேறுகளைப் பெற வேண்டும், உயர்கல்விக்கான கதவுகள் சரியான நேரத்தில் திறக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். இந்த காலச் சட்டகத்தை உறுதியுடன் செயற்படுத்த அரசு உறுதிபூண்டுள்ளது. இது அவசியமானது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

பரீட்சைகள் ஆணையாளர் எச்.ஜே.எம்.சி. ஜயசுந்தர, அதிபர் மனோமி செனவிரத்ன, ஆசிரியர்கள், தற்போதைய மற்றும் பழைய மாணவிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment