சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடல் இராணுவத்திடமிருந்து நீக்கம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 19, 2023

சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடல் இராணுவத்திடமிருந்து நீக்கம்

இராணுவத்தினர் இதுவரை முன்னெடுத்து வந்த வாகன சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் வேலைத்திட்டம் நீக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஜூலை மாதம் 09 இல், ஒன்று கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமையவே இம்முடிவு எடுக்கப்பட்டது.

வாகன சாரதிப்பத்திரம் அச்சிடும் பணியை இராணுத்தினர் முன்னெடுத்து வந்ததால், நாட்டுக்கு 81 கோடி 07 இலட்சத்து 99 ஆயிரத்து 495 ரூபா மீதப்படுத்தப்பட்டது. 

2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதலாம் திகதியிலிருந்து இதுவரையான காலப்பகுதியில் இவ்வேலைத்திட்டமூடாக 24 இலட்சத்து 34 ஆயிரத்து 467 நிலையான மற்றும் தற்காலிக வாகன சாரதி அனுமதிப்பத்திரங்களை இராணுவம் அச்சிட்டது.

பத்து நிலையங்களில் முன்னெடுக்கப்பட்டு வந்த ஒன்லைன் ஊடாக சாரதி அனுமதிப்பத்திரம் விநியோகிக்கும் நடவடிக்கைகளும் 15 நிலையங்களினூடாக ஒன்லைன் அற்ற முறையில் முன்னெடுக்கப்பட்ட விநியோக செயற்பாகளும் மீண்டும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திடம் வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment