உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டமூலம் ஆகியவற்றை அரசாங்கம் உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அரசாங்கம் உடனடியாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டமூலம் ஆகியவற்றை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இந்த இரு சட்டமூலங்களும் பொதுமக்களின் சுதந்திரம் மீது கடுமையான தலையீடுகளை செய்யும் எனவும் எச்சரித்துள்ளது.
15 ஆம் திகதியும், 18 ஆம் திகதியும் வர்த்தமானியில் வெளியிட்ட சட்டமூலங்களை அரசாங்கம் உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும் அவற்றை தொடர்ந்தும் முன்னெடுக்கக் கூடாது எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் கூட்டத்தில் இரு சட்டமூலங்களும் பொதுமக்களின் சுதந்திரம் மீது தீவிரமான தலையீடுகளை மேற்கொள்ளும் ஜனநாயகத்தின் மீதும் நாட்டின் சட்டத்தின் ஆட்சி மீதும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இரண்டு சட்டமூலங்கள் தொடர்பிலும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உட்பட அதனுடன் தொடர்புபட்டவர்களுடன் எந்த விதமான கலந்தாலோசனைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
பயங்கரவாத எதிர்ப்புச் தடைச் சட்டம் குறித்த முந்தைய வரைபு குறித்தும் தங்களுடன் கலந்தாலோசிக்கவில்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான சட்டமூலங்களை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு முதல் அரசாங்கம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் கலந்தாலோசனைகளை மேற்கொள்ள வேண்டும் இந்த சட்டமூலங்கள் சமூகத்திற்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment