(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை இந்த நாட்டில் விசாரணை நடத்தி ஒருபோதும் தீர்வு காண முடியாது. அதனால் சர்வதேச விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (5) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஜனாதிபதித் தேர்தலில் நானும் போடியிட்டேன். இதன்போது கோத்தாபய ராஜபக்ஷ்வுக்கு வாக்களிக்குமாறு தெரிவித்த விடயத்தை பேராயர் கர்தினால் மெல்கம் ரன்ஜித் ஆண்டகை தெரிவித்திருந்தார்.
நாட்டில் அப்போது தேசிய பாதுகாப்பு தொடர்பில் பிரச்சினை இருந்தது. ஈஸ்டர் தாக்குதல் காரணமாக கர்தினால் மாத்திரம் அன்றி கத்தோலிக்க மக்கள் மிகவும் மனவேதனையிலேயே இருந்தனர்.
என்றாலும் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினையால் நாங்கள் தோல்வியுற்றோம். கோத்தாபய ராஜபக்ஷ் வெற்றி பெற்றார் என்ற நம்பிக்கையிலேயே நியமிக்கப்பட்டார்.
ஆனால் ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை கண்டுபிடிக்க விசாரணை நடத்துமாறு வெளிநாட்டு புலனாய்வு பிரிவு எமக்கு தெரிவிப்பது தொடர்பில் நாங்கள் வெட்கப்பட வேண்டும்.
வெளிநாட்டு ஊடகமொன்று விசாரணை நடத்துமாறு தெரிவிக்கும் வரை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா என கேட்கிறேம்? இதற்கு வெளிநாடுகளின் ஆலாேசனை தேவையா? இந்த தாக்குதலின் உண்மையை தேடுவதற்கு ஆட்சியாளர்களுக்கு மனம் இல்லையா?
கர்த்தினால் மெல்கம் ரன்ஜித் ஆண்டகை எனக்கு எதிராக வாக்களிக்குமாறு தெரிவித்தமையை நான் பொருட்படுத்தவில்லை. அது அவரின் மனதில் இருக்கும் வேதனையிலேயே தெரிவித்திருப்பார். கத்தோலிக்க மக்களின் உள்ளங்களில் அந்த வேதனை இன்றும் இருக்கிறது.
அதனால் ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை இந்த நாட்டில் விசாரணை நடத்தி கண்டுபிடிக்க முடியாது. அதனால் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என தெரிவிக்கிறோம். அதனால் கர்தினால் உட்பட கத்தோலிக்க மதத் தலைவர்கள் மற்றும் கத்தோலிக்க மக்களை நிந்தனை செய்ய வேண்டாம். அவர்கள் மன வேதனையிலேயே கதைக்கின்றனர்.
ஆனால் அரசாங்கத்துக்கு அதிகாரத்துக்கு வரும் வேதனையே இருந்தது. ஈஸ்டர் தாக்குதலை இவர்கள் பயன்படுத்திக் கொண்டு, முதலைக்கண்ணீர் வடித்தனர். தாக்குதலை தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்திக் கொண்டு வாக்கு பெற்றுக் கொண்டனர்.
அதனால் கர்தினால் மெல்கம் ரன்ஜித் ஆண்டகை உட்பட கத்தோலிக்க மதத் தலைவர்கள் மற்றும் கத்தோலிக்க மக்களை நிந்தனை செய்யாமல், இந்த தாக்குதல் தொ்டர்பில் சர்வதேச விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன் என்றார்.
No comments:
Post a Comment