பாடசாலைக்குள் கசிப்பு விற்ற மாணவன்! - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 26, 2023

பாடசாலைக்குள் கசிப்பு விற்ற மாணவன்!

இரத்தினபுரி மாவட்டத்தில் பிரபல பாடசாலை ஒன்றில் மாணவனொருவன் சக மாணவர்களுக்கு கசிப்பு விற்பனை செய்துள்ளார்.

இரத்தினபுரி - கலவானை பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலையின் மாணவன் ஒருவன் பாடசாலைக்குள் கசிப்பு விற்பனை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இதனை அவதானித்த பாடசாலை ஆசிரியர் மாணவனை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

குறித்த பாடசாலையில் 9 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவனே இவ்வாறு கசிப்பு விற்பனை செய்துள்ளார்.

குறித்த மாணவன் தண்ணீர் போத்தலில் கசிப்பை கொண்டு சென்று உயர்தர மாணவர்களுக்கு கோப்பைகளில் ஊற்றி விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், பொலிஸார் மாணவனை கடுமையாக எச்சரித்து விடுவித்துள்ளார்கள்.

No comments:

Post a Comment