விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகமவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் பாகங்களை இணைத்து ஜீப் வண்டி ஒன்றை உருவாக்கிய சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகமகே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இன்றையதினம் (27) காலி பிரதான நீதவான் முன்னிலையில் முன்னிலைப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு பிணை வழங்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
தலா ரூ. 50 இலட்சம் கொண்ட 2 சரீரப் பிணைகள் மற்றும் ரூ. 50,000 ரொக்கப் பிணைகளில் அவர் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து குறித்த வழக்கு எதிர்வரும் பெப்ரவரி 02 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் ஒன்று சேர்த்த ஜீப் வண்டி ஒன்றை பொருத்திய சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகமவை விளக்கமறியலில் வைக்குமாறு, கடந்த செப்டெம்பர் 14ஆம் திகதி காலி பிரதான நீதவான் உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment