நாடளாவிய ரீதியில் இன்று வைத்தியர்கள் போராட்டம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 12, 2023

நாடளாவிய ரீதியில் இன்று வைத்தியர்கள் போராட்டம்

நாடளாவிய ரீதியில் இன்று (12) பல்வேறு மாவட்டங்களிலும் அமைந்துள்ள வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் சாத்வீக போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று (12) நண்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

வைத்தியர்கள் நாட்டை விட்டுச் செல்கின்றமையினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் தீர்வொன்றைப் பெற்றுத்தருமாறு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

வைத்தியசாலைகளின் சிகிச்சை நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர், வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment