ரயிலில் பாய்ந்து தந்தையும், மகளும் உயிர் மாய்ப்பு - கந்தளாயில் சம்பவம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 6, 2023

ரயிலில் பாய்ந்து தந்தையும், மகளும் உயிர் மாய்ப்பு - கந்தளாயில் சம்பவம்

(காளிராசா சுஜீத்தா)

திருகோணமலையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி சென்ற இரவு தபால் சேவை ரயிலின் மீது தந்தையும், மகளும் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்று (06) இரவு கந்தளாய் - பராக்கிர மாவத்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை - கந்தளாய் புகையிரத நிலைய தண்டவாளத்தின் அருகே தந்தையும், மகளும் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்ததாகவும், ரயில் வந்ததும் தந்தையும், மகளும் ரயிலின் முன்னே குதித்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

இச்சம்பவத்தில் 38 வயதுடைய தந்தையும், ஆறு வயதுடைய மகளும் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த இருவரின் சடலமும் கந்தளாய் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இவரது மனைவி குவைட் நாட்டில் பணிப் பெண்ணாக பணியாற்றி வரும் நிலையில் அவர் வேறு ஒரு நபருடன் தொடர்பில் இருப்பதாக கேள்வியுற்ற கணவன் விரக்தியில் கடிதம் ஒன்றை எழுதி சட்டைப் பையில் வைத்து தற்கொலை செய்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

No comments:

Post a Comment