தலைவர் பதவியோ அல்லது செயலாளர் பதவியோ வழங்காமல் தயாசிறி ஜயசேகரவை எச்சந்தர்ப்பத்திலும் கட்சியில் இணைத்துக் கொள்ளத் தயாரென, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கட்சியின் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்களின் பங்கேற்புடன் கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையிலே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தயாசிறி விரும்பினால் அவர் எந்த சந்தர்ப்பத்திலும் கட்சியில் இணைய முடியும். அதற்கு எந்த தடையும் கிடையாது என்றும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
தயாசிறி ஜயசேகரவை செயலாளர் பதவியிலிருந்து நீக்கியமை தொடர்பில், கட்சியின் தலைவரான மைத்திரி இதன்போது தெளிவுபடுத்தினார்.
அத்துடன் அடுத்த வருடம் தேர்தல் வருடமாக இருக்குமென்றும் ஒன்று அல்லது இரண்டு தேர்தல்களை சந்திக்க நேருமென்றும் அவர் குறிப்பிட்டார்.
எனவே, முன்கூட்டியே இதற்கு தயாராகுமாறும் மைத்திரிபால கேட்டுக்கொண்டார்.
மேற்படி பேச்சுவார்த்தையில் அமைச்சர்களான நிமல் சிறிபாலடி சில்வா, மஹிந்த அமரவீர, எம்பிக்களான துமிந்த திஸாநாயக்க மற்றும் ஷான் விஜேயலால்டி சில்வா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)
No comments:
Post a Comment