கருப்பை அகற்றம் : பொலிஸில் முறைப்பாடு - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 27, 2023

கருப்பை அகற்றம் : பொலிஸில் முறைப்பாடு

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் மனைவியின் கருப்பையை அகற்றிய விடயம் தொடர்பில் கணவன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கடந்த 26.06.2023 குழந்தை பிரசவத்திற்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தனது மனைவிக்கு 27.06.2023 அன்று சத்திர சிகிச்சை மூலம் இறந்த நிலையில் குழந்தை எடுக்கப்பட்டதோடு, தனது மனைவியின் கருப்பையும் அகற்றப்பட்டுள்ளது.

இது மருத்துவ தவறுகளின் காரணமாக இடம்பெற்றது எனத் தெரிவித்து இராசதுரை சுரேஸ் என்பவர் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

தனது குழந்தை வயிற்றுக்குள்ளே இறப்பதற்கும், தனது மனைவியின் கருப்பை அகற்றப்படுவதற்கும் மருத்துவர்களின் தவறே காரணம் எனவும் தனது வாழ்க்கையில் இனி குழந்தை பாக்கியமே இல்லாத நிலைமைக்கு தனது குடும்பத்தை தள்ளிவிட்டார்கள் என்றும் தெரிவித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவன் மேற்படி முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

No comments:

Post a Comment