விசா சேவையை இரத்து செய்த இந்தியா அரசு - News View

About Us

About Us

Breaking

Thursday, September 21, 2023

விசா சேவையை இரத்து செய்த இந்தியா அரசு

காலிஸ்தான் விவகாரம் தொடர்பாக, இரு நாடுகள் இடையே கருத்து மோதல் நிலவி வரும் நிலையில் இன்று (21) கனடா நாட்டு குடிமக்களுக்கான விசா சேவையை இரத்து செய்து இந்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஒரு குருத்துவராவுக்கு வெளியே சீக்கிய தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். 

நிஜ்ஜார் குரு நானக் சீக்கிய குருத்வாரா சாஹிப்பின் தலைவராகப் பதவி வகித்து வந்தார். அவர் இந்திய அரசால் தேடப்படும் நபர்களின் பட்டியலில் இடம்பெற்றிருந்தார். 

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசு இருக்கலாம் என அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார். ஆனால், கனடாவின் குற்றச்சாட்டை இந்திய அரசு மறுத்துள்ளது.

இதற்குப் பிறகு இந்திய தூதரக ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவின் (RAW) மூத்த அதிகாரியை நாட்டை விட்டு வெளியேறுமாறு ஓட்டாவா உத்தரவிட்டது. இதற்கு பதிலடியாக கனடாவின் உயர்மட்ட தூதர் ஒருவரை “நாட்டின் உள் விவகாரங்களில் தலையிட்டதற்காகவும், இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகவும் இந்தியா வெளியேற்றியது. 

இந்தச் சம்பவத்தால், கனடா - இந்தியா உறவுக்கிடையில் விரிசல் ஏற்பட்டு, பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது

இந்நிலையில், கனடாவில் இருந்து இந்தியா வரும், கனடா குடிமக்களுக்கான விசா சேவையை இரத்து செய்து இந்திய அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னதாக, அங்கு மேலும் ஒரு காலிஸ்தான் தீவிரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் கனடாவில் உள்ள இந்திய மாணவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய அரசு ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment