மீண்டும் தலைவராக தெரிவு செய்யப்பட்டார் ஜஸ்வர் உமர் - News View

About Us

About Us

Breaking

Friday, September 29, 2023

மீண்டும் தலைவராக தெரிவு செய்யப்பட்டார் ஜஸ்வர் உமர்

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் தலைவரான ஜஸ்வர் உமர் மீண்டும் சம்மேளனத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன தேர்தல் இன்று (29) கொழும்பில் நடைபெற்றது.

எதிர்வரும் நான்கு வருடங்களுக்கு பணியாற்ற அதிகாரிகளை தெரிவு செய்யும் தேர்தல் இன்று இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது.

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் மற்றும் ஆசிய கால்பந்தாட்ட சம்மேளனங்களை சேர்ந்த அதிகாரிகளின் கண்காணிப்பில் இந்த தேர்தல் நடைபெற்றது.

முன்னாள் தலைவரான ஜஸ்வர் உமரும் அனுராதபுரம் மாவட்ட கால்பந்தாட்ட லீக்கின் தலைவர் தக்சின சுமதிபாலவும் தேர்தலில் போட்டியிட்டனர்.

இலங்கை கால்பந்தாட்ட நடுவர்கள் சங்கத்தின் சார்பில் போட்டியிட்ட முன்னாள் தலைவர் ஜஸ்வர் உமர் 54 வாக்குகளை பெற்றார். தக்சின சுமதிபாலவுக்கு 20 வாக்குகள் மாத்திரமே அளிக்கப்பட்டன.

இதேவேளை, நீர்கொழும்பு கால்பந்தாட்ட லீக்கின் ரஞ்சித் ரொட்ரிகோ, களுத்துறை கால்பந்தாட்ட லீக்கின் டொக்டர் மினில் பெர்னாண்டோ, காலி கால்பந்தாட்ட லீக்கின் எஸ்.டி.நாகாவத்த மற்றும் இலங்கை கடற்படை கால்பந்தாட்ட லீக்கின் கே.எம்.எம்.பீ.கருணாதிலக்க ஆகியோர் உப தலைவர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment