மாணவர்களின் புத்தகப் பைகளிலிருந்து போதை கலந்த இன்ஹேலர்கள் மீட்பு - News View

About Us

About Us

Breaking

Friday, September 22, 2023

மாணவர்களின் புத்தகப் பைகளிலிருந்து போதை கலந்த இன்ஹேலர்கள் மீட்பு

குருணாகல் பகுதியில் பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளில் இருந்து சந்தேகத்துக்கு இடமான திரவம் அடங்கிய இன்ஹேலர்கள் சில மீட்கப்பட்டதாக கொக்கரெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலை மாணவர்கள் சிலரின் புத்தகப் பைகளில் இருந்து மீட்கப்பட்டதை அடுத்து அவற்றை பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் வர்த்தகர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கொக்கரெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர், கொக்கரெல்ல பிரதேசத்தில் தொலைபேசிக்கான உபகரணங்களை விற்பனை நிலையத்தை நடத்தி வருபவர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

அந்த பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் ஒன்பதாம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் சிலரின் பாடசாலைப் புத்தகப் பையை அந்த வகுப்பாசிரியர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது இவை கைப்பற்றப்பட்டன. 

அதன் பின்னர் குறித்த ஆசிரியர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குருநாகல் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உபுல் சந்தன அபேசிங்கவின் பணிப்புரையின் பேரில் வடமேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வசந்த கித்சிறி ஜயலதின் பூரண மேற்பார்வையின் கீழ் கொகரெல்ல பொலிஸ் நிலைய பிரதம பொலிஸ் பரிசோதகர் விஜேரத்ன தலைமையிலான குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment