இளையோரை போதைக்கு அடிமையாக்கும் கும்பல் : தனியார் வைத்தியசாலை பெண் பணியாளர் உள்ளிட்ட நால்வர் கைது - News View

About Us

About Us

Breaking

Friday, September 8, 2023

இளையோரை போதைக்கு அடிமையாக்கும் கும்பல் : தனியார் வைத்தியசாலை பெண் பணியாளர் உள்ளிட்ட நால்வர் கைது

யாழ்ப்பாணத்தில் பதின்ம வயதினரை போதைக்கு அடிமையாக்கும் கும்பலைச் சேர்ந்தவர்கள் எனும் குற்றச்சாட்டில் யாழில் உள்ள தனியார் வைத்தியசாலையில் பணி புரியும் பெண்ணொருவர் உள்ளிட்ட நால்வரை யாழ்ப்பாண பொலிஸார் நேற்று வியாழக்கிழமை (07) கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் மற்றும் பதின்ம வயது இளையோரை போதைக்கு அடிமையாக்கி, அவர்களுக்கு போதைப் பொருளை விற்பனை செய்துவரும் கும்பல் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

விசாரணைகளின் அடிப்படையில், யாழில் உள்ள தனியார் வைத்தியசாலையில் பணி புரியும் பெண்ணொருவர் உள்ளிட்ட நால்வரை பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில், கைது செய்யப்பட்ட பெண் உள்ளிட்ட நால்வரும் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

அத்தோடு குறித்த நபர்கள் யாழில் இயங்கும் பாரிய போதைக் கும்பலின் வலையமைப்பை சேர்ந்தவர்கள் என்றும், தொடர் விசாரணைகளின் அடிப்படையில், அவர்களின் வலையமைப்பை கைது செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment