இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட கிளிநொச்சி மத்திய கல்லூரிக் காணி - News View

About Us

About Us

Breaking

Friday, September 15, 2023

இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட கிளிநொச்சி மத்திய கல்லூரிக் காணி

கிளிநொச்சி மத்திய கல்லூரிக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் காணி இராணுவத்தினரால் நேற்று வியாழக்கிழமை (14) உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அருகில் இரத்தினபுரம் பிரதேசத்தின் வீதிப் பக்கமாக இருந்த காணியே இவ்வாறு இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது. 

கிளிநொச்சி மத்திய கல்லூரியின் இந்தக் காணியானது, கடந்த 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த நிலையிலேயே விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தக் காணியை விடுவித்தமையை உறுதி செய்வதற்கான ஆவணப் பத்திரத்தை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரனிடம் இராணுவ அதிகாரி உத்தியோகபூர்வமாகக் கையளித்து வைத்தார். 

இந்தக் காணியை விடுவிப்பதற்கான நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், கரைச்சி பிரதேச செயலாளர், இராணுவ உயர் அதிகாரிகள், கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கிளிநொச்சி குறூப் நிருபர்

No comments:

Post a Comment