சுகாதார அமைச்சருக்கு எதிராக புத்தளத்தில் கையெழுத்துப் போராட்டம் - News View

About Us

About Us

Breaking

Monday, September 4, 2023

சுகாதார அமைச்சருக்கு எதிராக புத்தளத்தில் கையெழுத்துப் போராட்டம்

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குவதற்காக புத்தளத்திலும் கையெழுத்துப் போராட்டம் இடம்பெற்றது.

இதன்போது சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைப்பதற்கு ஆதரவாக சுமார் 300 க்கும் அதிகமான மக்கள் கையெழுத்து ஆவணத்தில் ஒப்பமிட்டனர்.

சுகாதார சேவை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதன் காரணமாக தற்போதைய சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான ஆவணத்தில் 10 இலட்சம் கையெழுத்துக்களை பதிவு செய்யும் நிகழ்வு ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி, முன்னாள் புத்தளம் நகர சபை தலைவர் எம்.எஸ்.எம். ரபீக் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment