ஜனாதிபதி செயலக பெயர் பலகையை காட்சிப்படுத்த வேண்டாம் ! - News View

About Us

About Us

Breaking

Thursday, September 21, 2023

ஜனாதிபதி செயலக பெயர் பலகையை காட்சிப்படுத்த வேண்டாம் !

ஜனாதிபதி செயலகத்தின் அனைத்து அதிகாரிகள் மற்றும் சாரதிகள் தமது வாகனங்களில் ஜனாதிபதி செயலக பெயர் பலகையை காட்சிப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

இந்த உத்தரவு ஜனாதிபதியின் பதில் செயலாளரினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம், இவ்வாறான பெயர் பலகைகளை காட்சிப்படுத்துகின்ற எந்தவொரு வாகனமும் ஜனாதிபதி செயலகத்துடன் தொடர்புடையவை அல்ல எனவும் ஜனாதிபதியின் பதில் செயலாளர் கூறியுள்ளார்.

மேலும் அவ்வாறு பெயர் பலகையை காட்சிப்படுத்தும் வாகனங்கள் பொதுமக்களை ஏமாற்ற மேற்கொள்ளப்படும் ஆள்மாறாட்ட முயற்சி எனவும் பதில் ஜனாதிபதி செயலாளர் மேலும் குறிப்பிட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment