(எம்.ஆர்.எம். வசீம்)
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ 500 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறு கோரி கீர்த்தி ரத்நாயக்கவுக்கு நட்டஈடு கோரிய கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
சமூக ஊடக செயற்பாட்டாளர் கீர்த்த ரத்நாயக்கவினால் பராமரிக்கப்பட்டு வரும் கீர்த்தி ரத்நாயக்க நெஷனல் எலட் என்ற சமூக ஊடகத்தில் வெளியிடப்பட்ட செய்தியால் தனது நற்பெயருக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ 500 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறு கோரி கீர்த்தி ரத்நாயக்கவுக்கு நட்டஈடு கோரிய கடிதமொன்றை அவரின் சட்டத்தரணி ஊடாக அனுப்பியுள்ளார்.
கீர்த்தி ரத்நாயக்கவின் சமூக வலைத்தளத்தில் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஊழல் மோசடிகளில் சம்பந்தப்பட்டுள்ளதாக கடந்த ஆகஸ்ட் மாதம் 24 மற்றும் செப்டம்பர் மாதம் 26 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் தனது நற்பெயருக்கு ஏற்பட்டிருக்கும் களங்கத்துக்கான மான நஷ்டஈடாக 500 மில்லியன் ரூபா வழங்க வேண்டும் என குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
மேலும், குறித்த தொகையை அல்லது அதில் ஒரு பகுதியேனும் கடித திகதியில் இருந்து 14 நாட்களுக்குள் செலுத்தாவிட்டால், வழக்குத் தாக்கல் செய்வோம் எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment