ஜனாதிபதியாகும் தகைமை ரணில் விக்கிரமசிங்கவுக்கே உண்டு : சஜித் பிரேமதாச நிபந்தனை கடிதம் எழுதிக் கொண்டிருந்தார் - அனுப பஸ்குவல் - News View

About Us

About Us

Breaking

Friday, September 29, 2023

ஜனாதிபதியாகும் தகைமை ரணில் விக்கிரமசிங்கவுக்கே உண்டு : சஜித் பிரேமதாச நிபந்தனை கடிதம் எழுதிக் கொண்டிருந்தார் - அனுப பஸ்குவல்

(இராஜதுரை ஹஷான்)

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதியாகும் தகைமை ரணில் விக்கிரமசிங்கவுக்கே உண்டு. நாடு தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது. ஜனாதிபதியாக பிறிதொருவர் தெரிவு செய்யப்பட்டால் நிலையான பொருளாதார மீட்சிக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள சகல திட்டங்களும் பலவீமடையும் என நலன்புரி சேவைகள் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்தார்.

கொழும்பில் வியாழக்கிழமை (28) இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, 2024 ஆம் ஆண்டு நிச்சயம் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும். தேர்தலை பிற்போட வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது.அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தல் நடத்தப்படும். எந்த அரசியல் கட்சியும் இதுவரை ஜனாதிபதி வேட்பாளரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.

அரசாங்கத்தை ஏற்கத் தயார் என்று தற்போது குரல் எழுப்பும் எதிர்க்கட்சித் தலைவர் உட்பட எதிரணியினர் கடந்த ஆண்டு நாடு பாரிய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டபோது அரசாங்கத்தை பொறுப்பேற்கவில்லை. நாடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தபோது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிபந்தனை விதித்து கடிதம் எழுதிக் கொண்டிருந்தார்.

நெருக்கடியான சூழ்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே எவ்வித நிபந்தனைகளுமில்லாமல் அரசாங்கத்தை பொறுப்பேற்றார். ஜனாதிபதியின் சிறந்த முகாமைத்துவ திட்டங்களினால் நாடு தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது. நிலையான பொருளாதார மீட்சிக்கான திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதியாகும் தகைமை ரணில் விக்கிரமசிங்கவுக்கே உண்டு. நாடு தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது. ஜனாதிபதியாக பிறிதொருவர் தெரிவு செய்யப்பட்டால் நிலையான பொருளாதார மீட்சிக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள சகல திட்டங்களும் பலவீமடையும். ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியானதும் புதிய அரசியல் கூட்டணி உதயமாகும். பலர் அரசியல் கூட்டணியில் ஒன்றிணைவார்கள் என்றார்.

No comments:

Post a Comment