சனல் 4 காணொளியை அனைத்து இலங்கையர்களும் பார்க்க வேண்டும் - அகிம்சா விக்கிரமதுங்க - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 6, 2023

சனல் 4 காணொளியை அனைத்து இலங்கையர்களும் பார்க்க வேண்டும் - அகிம்சா விக்கிரமதுங்க

சனல் 4 வெளியிட்டுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த காணொளியை அனைத்து இலங்கையர்களும் பார்க்க வேண்டும் என படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த உண்மைகளை அம்பலப்படுத்தும் சனல் 4 இன் வீடியோவை பார்த்த பின்னர் ஏற்பட்ட உணர்வுகளை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.

பல வருடங்களாக இந்த தாக்குதலிற்கும் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் தொடர்பிருக்க வேண்டும் என நான் கருதி வந்துள்ளேன்.

இது அனைத்து இலங்கையர்களும் பார்க்க வேண்டிய மிக முக்கியமான படமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment