சட்டவிரோத விடயங்களை 10 நாட்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் : அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் - News View

About Us

About Us

Breaking

Friday, September 15, 2023

சட்டவிரோத விடயங்களை 10 நாட்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் : அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ள அமைச்சர் டக்ளஸ்

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் மணல் கடத்தல் கால்நடைகள் கடத்தல் மற்றும் ஏனைய சட்டவிரோத விடயங்களை, எதிர்வரும் 10 நாட்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

யாழ் குடா நாட்டில் அண்மைய நாள்களில் இடம்பெற்றுவரும் சட்டவிரோத மணல் கடத்தல், கால்நடைகள் கடத்தல் ஏனைய சட்டவிரோத சம்பவங்கள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம், நேற்று (15) யாழ் மாவட்ட செயலகத்தில், மாவட்டத்தின் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் கடற்தொழில் அமைச்ருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.

குறித்த கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர், யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதியின் பிரதிநிதி, பிரதேச செயலாளர்கள், பொலிஸ் உயரதிகாரிகள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களாகிய பலரும் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment