1000 தாதியர்களை சேவையில் இணைத்துக் கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 13, 2023

1000 தாதியர்களை சேவையில் இணைத்துக் கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானம்

தாதியர் கற்கை நெறியை பூர்த்தி செய்த 1000 தாதியர்களை சேவையில் இணைத்துக் கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்த ஆட்சேர்ப்பு விரைவில் மேற்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சர் கெ​ஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.

தாதியர் கற்கை நெறியை நிறைவு செய்த இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

சுகாதார அமைச்சின் வளாகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது தற்போது சுமார் 3,000 பணியிடங்கள் வெற்றிடமாக உள்ளதாக தெரிவித்தார்.

இதேவேளை, இணை சுகாதார பட்டதாரிகள் குழுவை சுகாதார அமைச்சின் பதவிகளில் உடனடியாக இணைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

தாதியர் பயிற்சிக்காக 3500 மாணவர்களை உள்வாங்குவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்காக 2019, 2020 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சையில் உயிரியல் பிரிவில் சித்தியடைந்த மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்பங்களை நாளை மறுதினம் (15) முதல் ஒக்டோபர் 18 ஆம் திகதி வரை அனுப்பி வைக்க முடியும்.

No comments:

Post a Comment