போலி பொலிஸார் : பொதுமக்களுக்கு எச்சரிக்கை - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 13, 2023

போலி பொலிஸார் : பொதுமக்களுக்கு எச்சரிக்கை

பொலிஸார் என தெரிவித்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுவோர் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பொலிஸ் சீருடைய அணியாத நபர்களே இவ்வாறான குற்றங்களில் ஈடுபடுகின்றனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் என தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு பொருட்கள், வாகனங்கள், வீடுகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை சோதனை செய்வது போன்று நடித்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸார் சோதனை அல்லது தேடுதல் நடவடிக்கையின்போது சீருடையில் காணப்படுவார்கள் என தெரிவித்துள்ள பொலிஸார் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாதவர்கள் தங்கள் உடமைகளை வீடுகளை சோதனையிடுவதற்கு பொதுமக்கள் அனுமதிக்கக்கூடாது எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment