அரச வைத்தியசாலைகளில் கதிரியக்க, CT Scan பரிசோதனைகள் தடைப்படும் நிலை - News View

About Us

About Us

Breaking

Friday, August 4, 2023

அரச வைத்தியசாலைகளில் கதிரியக்க, CT Scan பரிசோதனைகள் தடைப்படும் நிலை

கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை காரணமாக அரச வைத்தியசாலைகளில் கதிரியக்க மற்றும் CT Scan பரிசோதனை நடவடிக்கைகள் தடைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது 400 கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதாக அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர் சங்கத்தின் தலைவர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்தார்.

இதன் காரணமாக தற்போது செயலிழந்துள்ள CT, PET, MR Scan இயந்திரங்களை திருத்தும் பணிகளுக்கு ஊழியர் பற்றாக்குறை நிலவுவதாகவும் அவர் கூறினார்.

இந்த பிரச்சினை தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக்க ஶ்ரீ சந்த்ரகுப்தவிடம் வினவியபோது, கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களை சேவையில் இணைத்துக் கொள்வது தொடர்பான யோசனை அமைச்சரவைக்கு சமர்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதற்கான அனுமதி கிடைத்தவுடன் கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களை உடனடியாக சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment