அரச வைத்தியசாலைகளில் இன்சுலின் தட்டுப்பாடு - News View

About Us

About Us

Breaking

Friday, August 4, 2023

அரச வைத்தியசாலைகளில் இன்சுலின் தட்டுப்பாடு

அரச வைத்தியசாலைகளில் இன்சுலினுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்சுலின் விநியோகத்திற்கான விலைமனு கோரலை வழங்கிய விநியோகஸ்தர்கள் போதியளவான இன்சுலினை வழங்காமையினால், இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக வேறு இரு விநியோகஸ்தர்கள் ஊடாக இன்சுலினை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், ஏனைய வைத்தியசாலைகளில் நிலவும் இன்சுலின் தட்டுப்பாட்டை தடுக்கும் வகையில் இன்சுலின் அடங்கிய 50,000 பொதிகளை அவசரமாக இறக்குமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் இவை நாட்டிற்கு கிடைக்குமெனவும் அவர் கூறியுள்ளார்.

நீரிழிவு நோயாளர்கள் பலர் தமது வாழ்வை முன்கொண்டு செல்வதற்கு வைத்தியசாலைகளில் வழங்கப்படும் இன்சுலின் முக்கியமானதாகும்.

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையினால் வைத்தியசாலைகளில் இன்சுலின் விநியோகத்தில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment