சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் இன்று (10) இந்தியா, இலங்கை உள்ளிட்ட உலகம் முழுவதும் வெளியானது.
இதனை முன்னிட்டு சென்னை ரோகிணி திரையரங்கில் இரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் இன்று உலக முழுவதும் வெளியானது. தமிழகத்தை பொறுத்தவரை 900 மேற்பட்ட திரையரங்குகளில் காலை முதல் காட்சி வெளியானதோடு, சென்னையில் காலை 9.00 மணிக்கு முதல் காட்சி வெளியானது.
உலகம் முழுவதும் 4,000 இற்கும் அதிகமான திரையரங்குகளில் இப்படம் இன்று வெளியாகிறது. இதனை மேலும் அதிகரிக்கும் வகையில், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெரும் நகரங்களில் பல தனியார் நிறுவனங்கள் ”ஜெயிலர்” திரைப்படத்தை முன்னிட்டு, அலுவலகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
சென்னையில் ரோகிணி, காசி உள்ளிட்ட பல்வேறு திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
திரையரங்குகளில் ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர். சென்னை ரோகிணி திரையரங்கில் ரசிகர்கள் ரஜினியின் புகைப்படங்கள் நிறைந்த பேனர்களுக்கு பால் அபிஷேகம் செய்தும், பாட்டசு வெடித்தும், மேள தாளங்கள் வைத்து பாடல்கள் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
தற்போது “ஜெயிலர்” திரைப்படம் ஒவ்வொரு மாநிலத்திலும் “Theartical Rights” எத்தனை கோடிகளுக்கு விலைபோனது என்ற விவரம் வெளிவந்துள்ளது. அதன் விவரம்
தமிழ்நாடு : ரூபா 62 கோடி
தெலுங்கு மாநிலங்கள் : ரூபா 13 கோடி
கர்நாடகா : ரூபா 10 கோடி
கேரளா : ரூபா 5.5 கோடி
வெளிநாடு : ரூபா 3 கோடி
ஓவர்சீஸ் : ரூபா 30 கோடி
மொத்தம் : ரூ.122.5 கோடி
No comments:
Post a Comment