சூம் சேவை கொரோனா தொற்று காலகட்டத்தின்போது பலரும் வீட்டிலிருந்து வேலை செய்ய உதவியாக இருந்தது.
இப்போது அந்த சூம் நிறுவனத்தின் ஊழியர்களே மீண்டும் அலுவலகத்திற்கு திரும்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
வேலையிடத்திலிருந்து சுமார் 80 கிலோ மீற்றர் தூரம் வரை வசிக்கும் ஊழியர்கள் வாரத்திற்கு இரு முறையாவது அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும்.
அந்த நடைமுறையே மிக அதிக பலன் அளிக்கக்கூடியது என்று நிறுவனம் குறிப்பிட்டது.
புதிய மாற்றம் இம்மாதமும் (ஓகஸ்ட்) அடுத்த மாதமும் (செப்டம்பர்) நடைமுறைப்படுத்தப்படும் என்று பி.பி.சி செய்தி நிறுவனம் தெரிவித்தது.
அமசோன், டிஸ்னிலாண்ட் உட்பட பல பெரிய நிறுவனங்கள் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் நாட்களைக் குறைத்துள்ளன.
No comments:
Post a Comment