இலங்கை மோட்டார் வாகன விளையாட்டுச் சங்கத்தின் பதிவை இடைநிறுத்தி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொசான் ரணசிங்கவினால் அதி விசேட வர்த்தமானி (2344/22) அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த சங்கத்தை உடனடியாக இடைநிறுத்தி, தற்காலிக செயற்பாடாக அச்சங்கத்தின் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல 7 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்படுவதாக, நேற்றையதினம் (09) ஒப்பமிடப்பட்டுள்ள குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய,
தலைவர்
மஹேஷ் கம்மன்பில
செயலாளர்
மேஜர் ஜெனரல் இந்துனில் ரணசிங்க
பொருளாளர்
புபுது விக்ரம
உறுப்பினர்கள்
ரமீஷ் மாஹமூர்
நிஷான் வீரசூரிய
சம்பிகா அமரசேகர
சஜாட் சுஹைர்
அத்துடன், 1973 ஆம் ஆண்டு 25ஆம் இலக்க விளையாட்டு சட்டம் மற்றும் செல்லுபடியான விளையாட்டு உத்தரவின் அடிப்படையில், விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தினால் இலங்கை மோட்டார் வாகன விளையாட்டுச் சங்கத்தின் விசேட பொதுக் கூட்டத்தை கூட்டி, தேர்தல் குழுவொன்றை நியமிக்கவும், தேர்தல் குழு மூலம் செயற்குழுவை நியமிப்பதற்கான தேர்தலை அறிவிப்பதற்கும், அதனை நடத்துவதற்கும் பணிப்பாளர் நாயகம் ஷேமால் பெனாண்டோவினால் அதனை மேற்பார்வை செய்வதற்கும் அதிகாரம் அளிப்பதாக, குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment