வாயிலிருந்து இரத்தம் கசிந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குடும்பத்தார் ஒருவர் இன்று (10) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் அறிவாலயம், இமையாளன் மேற்கைச் சேர்ந்த 48 வயதுடைய இராசா சிவபாதம் என்பவராவார்.
அவர் கடந்த ஐந்தாம் திகதி அதிகாலை படுக்கையிலேயே வாயிலிருந்து குருதி வெளியேறிய நிலையில் காணப்பட்டதை அடுத்து உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இம்மரணம் தொடர்பில் பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராசா விசாரணைகளை மேற்கொண்டபோது எட்டு மாதமாக உள நோய்க்கு மருந்து பாவித்து வந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டதோடு, பிரேத பரிசோதனையில் உள நோய்க்கு பாவித்த மருந்து உடலுக்கு ஒவ்வாமையால் மரணம் சம்பவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில் விஷேட நிருபர்
No comments:
Post a Comment