ஏழரை கோடி ரூபா லொத்தர் பரிசு வென்றவரைக் கடத்தி தாக்குதல் : பணத்தை எங்கே மறைத்து வைத்திருக்கிறாய் எனக் கேட்டனராம் - சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது - News View

About Us

About Us

Breaking

Saturday, August 12, 2023

ஏழரை கோடி ரூபா லொத்தர் பரிசு வென்றவரைக் கடத்தி தாக்குதல் : பணத்தை எங்கே மறைத்து வைத்திருக்கிறாய் எனக் கேட்டனராம் - சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது

தேசிய லொத்தர் சீட்­டி­ழுப்பில் ஏழ­ரை­ கோடி ரூபா பரிசு பெற்ற ஒருவர் கும்­ப­லொன்­றினால் பல­வந்­த­மாகக் கடத்திச் செல்­லப்­பட்டு வீடொன்றில் அடைத்து வைக்­கப்­பட்டு கொடூ­ர­மாகத் தாக்­கப்­பட்ட சம்­பவம் பர­ப­ரப்­பினை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

கண்டி மாவட்டம் அக்­கு­ற­ணையை வதி­வி­ட­மாகக் கொண்ட லொத்தர் சீட்­டி­ழுப்பில் ஏழ­ரை­ கோடி ரூபா பரி­சினை வென்ற நபர் ஒரு­வரே இவ்­வாறு தாக்­கப்­பட்டு கொடு­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்ளார்.

அவரைக் கடத்திச் சென்ற குழு­வினர் சீட்­டி­ழுப்பு பரி­சுத்­ தொ­கை­யான 7½ கோடி ரூபாவை மறை­வாக வைத்­தி­ருக்கும் இடத்தை வெளிப்­ப­டுத்­து­மாறு கோரியே இந்த தாக்­குலை மேற்­கொண்­டுள்­ளனர்.

லொத்தர் சீட்­டி­ழுப்பில் 7½ கோடி ரூபா பரி­சுத்­ தொ­கையை வெற்­றி ­பெற்­றவர் அக்­கு­ர­ணையைச் சேர்ந்த மொஹமட் ஹஸீம் என்­ப­வ­ராவார்.

இவர் தம்­புள்­ளையில் தங்­கி­யி­ருந்­த­போது கடந்த ஜூலை மாதம் 27 ஆம் திகதி கடத்­தப்­பட்டார். தம்­புள்­ளைக்குச் சென்ற நால்வர் அடங்­கிய கடத்தல் குழு­வினர் அவரை காரில் கடத்தி வந்­துள்­ளனர்.

தம்­புள்­ளை­யி­லி­ருந்து கடத்­தி­ வ­ரப்­பட்ட ஹஸீம் கம்பளை ரத்மல்கடுவ எனுமிடத்தில் மர ஆலை உரிமையாளர் ஒருவரின் வீடு ஒன்றில் 6 நாட்களும், பின்பு அவரது மைத்துனர் ஒருவரின் வீடொன்றில் 4 நாட்களும் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

கம்பளை - ரத்மல்கடுவ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நபர் ஒருவர் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக கம்பளை பொலி­ஸா­ருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்தே குறிப்பிட்ட நபரை பொலிஸார் மீட்டுள்ளனர்.

விஷேட அதிரடிப் படையினர் மற்றும் கம்பளை பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவினர் இணைந்து இந்த மீட்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர். கடந்த 6ஆம் திகதி குறிப்பிட்ட நபர் மீட்கப்பட்டுள்ளார்.

மொஹமட் ஹஸீம் பொலிஸாருக்கு வழங்­கிய வாக்­கு­மூ­லத்தில் ‘‘தேசிய லொத்தர் சீட்­டி­ழுப்பில் தனக்குக் கிடைத்த 7½ கோடி ரூபா பரிசுத் தொகையை மறைத்து வைத்­துள்ள இடத்தைக் காண்­பிக்­கு­மாறு கோரியே என்னைக் கடத்தி வந்­த­வர்கள் 10 நாட்­க­ளாக வீட்டில் அடைத்து வைத்து தாக்­கி­னார்கள்.

என்னை பெல்­டினால் தாக்­கி­னார்கள். உட­லெல்லாம் வலிக்­கி­றது. கழிப்பறைக்குச் செல்­லும்­போது என்­னுடன் இருவர் காவ­லுக்கு வந்­தார்கள். என்­ மீது பல இடங்­களில் தாக்­குதல் நடத்­தி­னார்கள்.

குரு­நாகல் வர்த்­தகர் ஒருவர் வந்து நான் அவ­ருக்கு ஒரு ­கோடி 20 இலட்சம் ரூபா கடன் வழங்க இருக்­கி­றது என்று கடிதம் எழுதி கையொப்பம் வாங்கிக் கொண்டார்.

நான் அவர்­க­ளுடன் குறிப்­பிட்ட வீட்டில் விருப்­பத்­து­டனே தங்­கி­யி­ருப்­ப­தாகக் குறிப்­பிட்டு என்­னி­ட­மி­ருந்து கடி­த­மொன்­றி­னையும் பெற்­றுக்­ கொண்­டார்கள். பொலி­ஸாரின் ஆலோ­ச­னைப்­ப­டியே கடிதம் பெறு­வ­தா­கவும் சந்­தேகநபர்கள் கூறி­னார்கள்’’ என்று தெரி­வித்­துள்ளார்.

இதே­வேளை சந்­தேகநபர்­க­ளுக்கும் குறிப்­பிட்ட நப­ருக்கும் பணக் கொடுக்கல் வாங்­கல்கள் இடம்­பெற்­றி­ருக்­கலாம். அவர் விருப்­பத்­து­டனே சந்­தேகநபர்­க­ளுடன் தங்­கி­யி­ருந்­தி­ருக்­கலாம் என பொலிஸார் சந்­தே­கிக்­கின்­றனர்.

மேலும் லொத்தர் பரி­சுத்­ தொ­கையை பரிசு பெற்ற நபர் வேறொ­ரு­வ­ரிடம் பாது­காப்­புக்­காக கைய­ளித்­த­தாக கூறப்­ப­டு­கி­றது. இந்­நபர் ஜப்­பா­னுக்குச் சென்று விட்­ட­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

கம்­பளைப் பொலிஸார் மர ஆலை உரி­மை­யாளர் உட்­பட நால்­வரைக் கைது செய்து இச்­சம்­பவம் தொடர்பில் விசா­ர­ணை­களை முன்னெடுத்து வருகின்றனர்.

Vidivelli

No comments:

Post a Comment