தம்புத்தேகமவில் கோர விபத்து : நால்வர் பலி - News View

About Us

About Us

Breaking

Thursday, August 3, 2023

தம்புத்தேகமவில் கோர விபத்து : நால்வர் பலி

தம்புத்தேகம - ஹிரியகம பகுதியில் இன்று (4) அதிகாலை 12.10 மணியளவில் கோர வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் நால்வர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

வேன் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் லொறியின் பின்பகுதியில் மோதியதால் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குருநாகலிலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த லொறி ஒன்று வீதியோரத்தில் நிறுத்த முற்பட்டபோது, அதே திசையில் பயணித்த வேன் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் லொறியின் பின்பகுதியில் மோதியுள்ளது.

விபத்தின்போது வேனில் பயணித்த 8 பேர் காயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர்களில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த மேலும் நான்கு பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தில் வசிக்கும் 36 மற்றும் 46 வயதுடைய இரண்டு ஆண்களும் 36 மற்றும் 43 வயதுடைய இரண்டு பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்னர்.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment