அம்பாறை மாவட்ட பிரதேச செயலகங்களில் சிங்கள மொழியில் விண்ணப்பம் : சிரமத்தில் தமிழ் பேசும் மக்கள் - News View

About Us

About Us

Breaking

Tuesday, August 8, 2023

அம்பாறை மாவட்ட பிரதேச செயலகங்களில் சிங்கள மொழியில் விண்ணப்பம் : சிரமத்தில் தமிழ் பேசும் மக்கள்

பாறுக் ஷிஹான்

வெளிநாடுகளில் தொழில் புரியும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு 10,000 பெறுமதியான பொதி வழங்கல் எனும் தொனிப்பொருளில் அம்பாறை மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களில் தற்போது தமிழ் பேசும் மக்களுக்கு சிங்கள மொழியிலான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன.

இவ்வாறு சிங்கள மொழியில் விநியோகிக்கப்படும் விண்ணப்பப்படிவங்களைப் பூர்த்தி செய்ய முடியாமல் தமிழ் பேசும் மக்கள் அலைந்து திரிவதை அவதானிக்க முடிகின்றது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளிநாடுகளுக்கு தொழில்களுக்காகச் சென்றிருக்கும் பெற்றோர்களின் பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தால் கற்றல் உபகரணங்கள் (10,000 ரூபாய் பெறுமதியான பொதி) வழங்கப்படும் எனக்கூறி இப்பிரதேச செயலகங்களில் தமிழ் மொழி மூலம் விண்ணப்பப்படிவங்கள் விநியோகிக்கப்பட்டிருந்தன.

பின்னர் தமிழ் மொழி மூலம் வழங்கப்பட்ட விண்ணப்பப்படிவம் நிராகரிக்கப்படுமெனக்கூறி சில அலுவலகர்கள் தமிழ் மொழி பேசும் மக்களுக்கு தனிச் சிங்கள மொழி மூல விண்ணப்பப் படிவங்களை வழங்கி உடனடியாகப் பூர்த்தி செய்து தர வேண்டுமென வற்புறுத்துவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் குறித்த மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் உரிய கவனம் செலுத்த வேண்டுமென பாதிக்கப்பட்ட மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

No comments:

Post a Comment