வசந்த முதலிகே உள்ளிட்ட மூவருக்கு பிடியாணை - News View

About Us

About Us

Breaking

Thursday, August 31, 2023

வசந்த முதலிகே உள்ளிட்ட மூவருக்கு பிடியாணை

வழக்கொன்றில் ஆஜராகாமையினால் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் ரத்கரவ்வே ஜினரத்ன தேரர் ஆகியோருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்ட வழக்கில் ஆஜராகாமையினால் மூவருக்கு எதிராகவும் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த திகதியில் கொழும்பிலுள்ள தனியார் கட்டடமொன்றுக்கு சொந்தமான வாகன நிறுத்துமிடத்திற்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 07 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கோட்டை நீதவான் திலின கமகே இன்று(31) உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment