முதல் வெற்றியை பதிவு செய்தது இலங்கை - News View

About Us

About Us

Breaking

Thursday, August 31, 2023

முதல் வெற்றியை பதிவு செய்தது இலங்கை

2023 ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி தனது முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

பங்களாதேஷூக்கு எதிராக நடைபெற்ற இன்றைய போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

B குழுவிற்கான இந்த போட்டி கண்டி பல்லேகல மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணித்தலைவர் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.

பங்களாதேஷ் அணிக்கு மொஹம்மட் நய்ம் மற்றும் Tanzid Hasan ஆகியோர் ஆரம்பத்தை வழங்கினர்.

அணியின் முதல் நான்கு விக்கெட்டுகளும் 95 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன.

மதீஷ பத்திரனவின் பந்துவீச்சில் அணித்தலைவர் Shakib Al Hasan ஐந்து ஓட்டங்களுடன் வெளியேறினார்.

Towhid Hridoy, Najmul Hossain Shanto ஆகியோர் ஐந்தாவது விக்கெட்டில் 59 ஓட்டங்களை பகிர்ந்தனர். Najmul Hossain Shanto 89 ஓட்டங்களை பெற்றார்.

மதீஷ பத்திரன 4 விக்கெட்களையும் மஹீஷ் தீக்ஷன 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

பங்களாதேஷ் அணியின் அனைத்து விக்கெட்களும் 164 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன.

165 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய இலங்கை அணி சார்பாக பெத்தும் நிஷங்க மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோர் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கினர்.

திமுத் கருணாரத்ன ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்ததுடன், பெத்தும் நிஷங்க 14 ஓட்டங்களை மாத்திரமே பெற்றார். குசல் மென்டிஸ் 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

நான்காவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த சதீர சமரவிக்ரம மற்றும் சரித் அசலங்க ஆகியோர் 78 ஓட்டங்களை பகிர்ந்தனர்.

சதீர சமரவிக்ரம 54 ஓட்டங்களைப் பெற்றார். சரித் அசலங்கவும் அரைச்சதம் கடந்தார்.

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான உள்நாட்டு உரிமத்தைப் பெற்றுள்ள TV1 தொலைக்காட்சியூடாகவும் SIRASATV.LK என்ற இணையத்தளத்தினூடாகவும் அனைத்து போட்டிகளையும் உங்களால் கண்டுகளிக்க முடியும்.

No comments:

Post a Comment