வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த நியூஸ் விவ் குழுமத்தின் இரத்ததான முகாம் - News View

About Us

About Us

Breaking

Sunday, August 6, 2023

வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த நியூஸ் விவ் குழுமத்தின் இரத்ததான முகாம்

நியூஸ் விவ் (News View) குழுமத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட இரத்ததான முகாம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் குருதி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் 2023.08.05ஆம் திகதி சனிக்கிழமை மீராவோடை அல் - ஹிதாயா மகா வித்தியாலயத்தில் நியூஸ் விவ் குழுமத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் நடைபெற்றது.

மட்டக்களப்பு இரத்த வங்கியின் ஆதரவோடு இடம்பெற்ற இரத்ததான முகாமில் பாடசாலைகள், அலுவலகங்கள் மற்றும் விளையாட்டுக்கழகங்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு இரத்ததானம் வழங்கினர்.

இந்த இரத்ததான முகாமிற்க்கு Wood Land Industries & Recycling நிறுவனத்தினர் அனுசரனை வழங்கி இருந்தனர்.

இரத்ததானம் வழங்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நியூஸ் விவ் குழுமத்தினர் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.

இதனை நடாத்தி முடிக்க ஆரம்பத்திலிருந்து இறுதி வரை பக்கத்துனையாக இருந்த நியூஸ் விவ் குழுமத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

No comments:

Post a Comment