அம்பாறை மாவட்ட பிரதம பொறியியலாளாராக கடமையேற்ற ஸாஹீர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 9, 2023

அம்பாறை மாவட்ட பிரதம பொறியியலாளாராக கடமையேற்ற ஸாஹீர்

நூருல் ஹுதா உமர்

அம்பாறை மாவட்ட பிரதம பொறியியலாளாராக ஏ.எம். ஸாஹீர் கடமைகளை பொறுப்பேற்றார்.

அம்பாறை மாவட்ட பிரதம பொறியியலாளாராக, பொறியியலாளர் ஏ.எம். ஸாஹீர் இன்று அம்பாரை அரசாங்க அதிபர் காரியாலயத்தில் கடமையேற்றார்.

கல்முனை கல்வி மாவட்ட பொறியியலாளாராக கடமையாற்றி அம்பாறை மாவட்ட பிரதம பொறியியலாளாராக ஏ.எம். ஸாஹீர் இன்று கடமையேற்ற இந்நிகழ்வில் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம, மேலதிக அரசாங்க அதிபர் வீ.ஜெகதீஷன், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். எஸ்.நஜீம், கல்முனை கல்வி வலய கணக்காளர் வை. ஹபீபுல்லாஹ், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம். அனீஸ், பிரதிக் கல்விப்பணிப்பாளர்கள், பொறியியலாளரின் குடும்ப உறுப்பினர்கள், பாடசாலை அதிபர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment