மலையக தமிழரின் அபிலாசைகள் அடிப்படையிலேயே ஜனாதிபதியுடன் பேசுவோம் : மனோ கணேசன் - News View

About Us

About Us

Breaking

Saturday, August 12, 2023

மலையக தமிழரின் அபிலாசைகள் அடிப்படையிலேயே ஜனாதிபதியுடன் பேசுவோம் : மனோ கணேசன்

நாம் எதிர்கட்சி. ஜனாதிபதி ஆளும்கட்சி. ஆனால், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எனக்கு புதியவரல்ல. எம்மை 25 ஆண்டுகள் அறிந்தவர். இன்று காலை கூட பேசி தெளிவுபடுத்தினார் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

தலவாக்கலையில் இன்று (12) நடந்த தமிழ் முற்போக்கு கூட்டணி  நடைபயண கூட்டத்தில் கலந்துகொண்டபோதே மனோ கணேசன் அவ்வாறு கூறினார். 

நாம் அவருடன் பேசுவோம். ஆனால் எமது நிகழ்ச்சி நிரலை அவருக்கு அனுப்புவோம். எமது குறைந்தபட்ச நிகழ்ச்சி நிரல் இதுதான். 

மலையகத்தில் வீடு கட்டி வாழவும், வாழ்வாதார தொழிலுக்குமான காணி உரிமை, பெருந்தோட்ட குடியிருப்புகளை அரச பொது நிர்வாக கட்டமைப்புக்குள் கொண்டு வருவது, இந்திய அரசு உறுதியளித்துள்ள இலங்கை ரூ. 300 கோடி நன்கொடை பயன்பாட்டு திட்டம், பெருந்தோட்ட நிறுவனங்களுக்கும், அரசுக்கும் இடையிலான நீண்ட கால குத்தகை ஒப்பந்தம் மீளாய்வு.

No comments:

Post a Comment