என்ன நடந்தது என்பதை அறியும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் : இழப்பீடுகளை வழங்க வேண்டும், குற்றவாளிகளை பொறுப்புக் கூறலுக்கு உட்படுத்த வேண்டும் - ஐ.நாவுக்கான இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 30, 2023

என்ன நடந்தது என்பதை அறியும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் : இழப்பீடுகளை வழங்க வேண்டும், குற்றவாளிகளை பொறுப்புக் கூறலுக்கு உட்படுத்த வேண்டும் - ஐ.நாவுக்கான இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி

வலிந்து காணாமலாக்கப்படுதல் குறித்த பாரம்பரியத்திற்கு தீர்வை காண்பது வெறுமனே நீதியுடன் தொடர்புபட்ட விடயம் மாத்திரமில்லை முன்னேற்றம் பேண்தகு அபிவிருத்தி போன்ற பாதையை இலங்கை உருவாக்குவதற்கும் மிகவும் அவசியமானது என ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் அன்ரூ பிரான்ஸ் தெரிவித்துள்ளார்

அறிக்கையொன்றில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, உலகம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை குறிக்கும் நிகழ்வுகளில் ஈடுபட்டுள்ள அதேவேளை இந்த ஈவிரக்கமற்ற குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் அன்புக்குரியவர்கள் எப்படி உள்ளனர் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிய முடியாத வேதனையை அனுபவித்தவர்கள் குறித்து எங்கள் சிந்தனைகள் திரும்புகின்றன. இந்த தினம் இலங்கையில் ஆழமான பிரதிபலிப்புகளை கொண்டுள்ளது.

இங்கு பல வருடங்களாக பல குடும்பங்களும் சமூகங்களும் நிச்சயமற்ற தன்மை மற்றும் துயரத்தை எதிர்கொண்டுள்ளதுடன் பதில்கள் அற்ற கேள்விகளின் நிழல்களில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

வலிந்து காணாமலாக்கப்படல் என்பது நாட்டின் வரலாற்றின் துயர்படிந்த கறையை விட்டுச் சென்றுள்ளது, நிச்சயமற்ற நிலையில் வாழும் ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்க்கையை தீர்மானிக்கின்றது. அவர்களின் அன்புக்குரியவர்கள் இல்லாத நிச்சயமாக இல்லை என கருத முடியாத நிலை காணப்படுகின்றது.

கடந்த தசாப்தத்தில் சிறிதளவு முன்னேற்றம் கூட ஏற்படாத நிலையில் தங்கள் அன்புக்குரியவர்களின் நிலையை அவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்பதை அறிவதற்கு இலங்கையின் குடும்பங்கள் பெரும் நெருக்கடிகளை சந்திக்கின்றனர்.

பதில்களுக்கான அவர்களின் தளர்ச்சியற்ற நீடித்த தேடல்கள் அவர்கள் மேலும் பழிவாங்கப்படும், அச்சுறுத்தப்படும் களங்கப்படுத்தப்படும் சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்படும் நிலையை உருவாக்கியுள்ளது.

சமீப வருடங்களில் இலங்கை பலவந்தமாக காணாமல் போதலின் பாரம்பரியத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்காக சில முக்கியமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 2015 இல் ஐசிபிபிஈடி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது, காணாமல் போனோர் அலுவலகத்தை ஏற்படுத்தியது இவை மைல்கற்களாகும்.

காணாமல் போனவர்கள் குறித்து காணாமல் போனவர்கள் அலுவலகம் பெற்றுக் கொண்டுள்ள வெளியிட்டுள்ள முறைப்பாடுகள் நீதியை வழங்குவது தொடர்பில் எற்பட்டுள்ள முன்னேற்றங்களிற்கான எங்களின் அளவுகோல்களாக காணப்படுகின்றன.

எனினும் உண்மை நீதி மற்றும் இழப்பீடு போன்றவற்றிற்கான பாதிக்கப்பட்டோரின் உரிமை தொடர்பில் இன்னமும் அதிகளவு செயற்பாடுகள் அவசியமாக உள்ளன.

பாதிக்கப்பட்டவர்களின் நிலை அவர்கள் எங்கிருக்கின்றார்கள் போன்றவற்றை அறிந்து கொள்வதற்கான முயற்சிகளை அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

துயரத்தை எதிர்கொண்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்க வேண்டும் குற்றவாளிகளை பொறுப்புக் கூறலிற்கு உட்படுத்த வேண்டும் எனவும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

உண்மையை நிலை நாட்டுவது பாதிக்கப்பட்டவர்கள் உயிர் பிழைத்தவர்கள் குடும்பத்தவர்களுக்கு மிகவும் அவசியமான விடயம், இதன் மூலம் மாத்திரமே காயங்களை ஆற்றும் நடவடிக்கை ஆரம்பமாக முடியும், நல்லிணக்க செயற்பாடுகள் ஆரம்பமாக முடியும்.

ஐக்கிய நாடுகள் வலிந்து காணாமலாக்கப்படுதலினால் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தவர்களுக்கு தொடர்ந்தும் தனது ஆதரவை வெளியிடுவதுடன் உண்மை நீதி நல்லிணக்கத்திற்காக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மேற்கொண்டுள்ள போராட்டங்களிற்கும் தனது ஆதரவை வெளியிடுகின்றது.

நாங்கள் இன்றைய நாளை குறிக்கும் அதேவேளை வலிந்து காணாமலாக்கப்படுதல் என்பது கடந்த காலத்தின் ஒரு விடயமாக மாறுவதை உறுதி செய்வதற்கான எங்கள் அர்ப்பணிப்பை புதுப்பித்துக் கொள்வோம்.

நாங்கள் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளிற்காக குரல் கொடுப்போம், நீதியின் கொள்கைகளை நிலைநிறுத்துவோம், எந்த குடும்பம் நிச்சயமற்ற நிலையில் வாழாத எதிர்காலத்தை உருவாக்குவோம்.

வலிந்து காணாமலாக்கப்படுதல் குறித்த பாரம்பரியத்திற்கு தீர்வை காண்பது வெறுமனே நீதியுடன் தொடர்புபட்ட விடயம் மாத்திரமில்லை முன்னேற்றம் பேண்தகு அபிவிருத்தி போன்ற பாதையை இலங்கை உருவாக்குவதற்கும் மிகவும் அவசியமானது.

No comments:

Post a Comment