எல்.பி.எல். 2023 இன் ஆரம்ப நிகழ்வில் தேசிய கீதத்தை தவறாக பாடினார் என்ற குற்றச்சாட்டிற்குள்ளான பாடகி உமாரா சிங்கவன்ச அதற்காக மன்னிப்புக் கோரியுள்ளார்.
எல்.பி.எல். போட்டியின் ஆரம்ப நிகழ்வில் தான் தேசிய கீதத்தை பாடியவிதம் எவரையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்புக் கோருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தனது முகநூலில் இதனை பதிவு செய்துள்ள அவர் தேசிய கீதத்தை இசைத்தவேளை வார்த்தை பிரயோகங்களில் தவறுகள் காணப்பட்டதை தானும் உணர்ந்ததாக தெரிவித்துள்ளார்.
நான் வார்த்தைகளை மாற்ற முயலவில்லை தேசிய கீதத்தை திரிபுபடுத்தவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை பிரஜை என்ற வகையில் நான் எப்போதும் தேசியக் கொடியை பெருமையுடன் கொண்டுசென்றுள்ளேன். நாட்டின் பெருமையை உயர்த்த முயன்றுள்ளேன். பாடல்கள் மூலம் என்னால் முடிந்தவரை நாட்டிற்கு பங்களிப்பு செய்துள்ளேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை லங்கா பிரீமியர் லீக் போட்டித் தொடரின் ஆரம்ப விழாவில் தேசிய கீதத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பில் பாடகி உமாரா சின்ஹவன்சவின் சகோதரி கருத்து தெரிவித்துள்ளார்.
“இன்று நாட்டில் பாரிய பிரச்சினைகள் காணப்படுவதாகவும், தற்போது சமூக வலைத்தளங்களில் தனது சகோதரி மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் ஏற்புடையதல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனது சகோதரி நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் போது பல விருதுகளை வென்றது ஏன் என்று கேள்வி எழுப்பிய அவர், இசைத் துறையில் தனது பங்களிப்பு மற்றும் தனது சகோதரி தேசபக்தியுடன் கூடிய நல்ல இதயம் கொண்டவர்” என்று கூறுகிறார்.
இந்த கருத்துக்களை அவர் தனது சமூக வலைத்தள கணக்கில் பதிவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment