நல்லூர் ஆலய திருவிழாவில் குழந்தைகளை வைத்து யாசகம் பெற தடை - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 9, 2023

நல்லூர் ஆலய திருவிழாவில் குழந்தைகளை வைத்து யாசகம் பெற தடை

நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவ திருவிழாவில் குழந்தைகளை வைத்து யாசகத்தில் ஈடுபட தடை விதிக்கப்படுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட மட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை (08) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போது சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டது.

அதற்கமைய, திருவிழா நேரங்களில் வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தருவோர் ஆலய வீதிகளில் குழந்தைகளை வைத்து யாசகத்தில் ஈடுபடுவதை தடுக்கும் வகையிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

இது தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் யாழ்ப்பாண தலைமை அலுவலக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கும் அறிவிக்கவுள்ளதாக கூறப்பட்டது.

No comments:

Post a Comment