யாழில் இரண்டு மாதங்களில் 33 சிறுவர்கள் போதைக்கு அடிமை - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 9, 2023

யாழில் இரண்டு மாதங்களில் 33 சிறுவர்கள் போதைக்கு அடிமை

யாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டு மாத காலப்பகுதிக்குள் 33 சிறுவர்கள் போதைக்கு அடிமையானவர்கள் என இனங்காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்ட மட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை (08) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றபோதே அதிகாரிகளால் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் போதைக்கு அடிமையாகி வரும் நிலைமை அதிகரித்து வருகிறது.

கடந்த 2 மாத காலப்பகுதிக்குள்ளேயே 33 சிறுவர்கள் போதைப் பொருள் பாவனையாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 11 பேர் ஹெரோயின் போதைப் பொருளுக்கும், 08 பேர் ஐஸ் போதைப் பொருளுக்கும், 07 பேர் கஞ்சா போதைப் பொருளுக்கும் ஏனையவர்கள் போதை மாத்திரைகளுக்கும் அடிமையாகியுள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.

அதேவேளை புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கும் அதிகளவான சிறுவர்கள் அடிமையாகியுள்ளனர் என குறிப்பிடப்பட்டது.

No comments:

Post a Comment