இரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து : ஒருவர் பலி : வைத்தியசாலையில் 40 மாணவர்கள் - News View

About Us

About Us

Breaking

Monday, August 7, 2023

இரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து : ஒருவர் பலி : வைத்தியசாலையில் 40 மாணவர்கள்

கந்தானை பள்ளிய வீதியிலுள்ள இரசாயன தொழிற்சாலையொன்றில் இன்று (08) காலை இடம்பெற்ற தீவிபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த தொழிற்சாலையில் கணக்காளராக பணியாற்றிய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தையடுத்து, தீயணைப்பு நடவடிக்கைகளுக்காக 02 வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதனிடையே, குறித்த இரசாயனத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயினால் வெளியான புகையை சுவாசித்ததன் காரணமாக ஏற்பட்ட சுவாசக் கோளாறினால் 40 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment