இலங்கையில் 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த இந்திய மத்திய அரசாங்கம் தவறிவிட்டது என திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் டிஆர் பாலு தெரிவித்துள்ளார்.
இந்திய மத்திய அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் தீர்மானத்தின் மீதான விவாதம் இடம்பெற்று வரும் நிலையில் அதில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையிடமிருந்து கச்சதீவை மீட்பதில் இந்திய அரசாங்கம் தோல்வியடைந்துவிட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் நாட்டிற்கு பிரதமர் எதுவும் செய்யவில்லை . தமிழ் நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு நடத்தி வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி எங்கு சென்றாலும் திருக்குறள், திருவள்ளுவர் பற்றி பேசுகிறார்; ஆனால் தமிழ் நாட்டிற்கு பிரதமர் எதுவும் செய்யவில்லை
நாடாளுமன்றத்துக்கு பிரதமர் நரேந்திர மோடியை வர வைக்க வேறு வழி இல்லாததால் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டு வந்துள்ளோம்.
கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு ஏன் குறைக்கவில்லை?
160 ஆண்டு கனவுத் திட்டமான சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை பாஜக அரசு கிடப்பில் போட்டது ஏன்? காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால் நிறைவேற்றப்படாமல் உள்ளது. சங் பரிவார் எதிர்ப்பால் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
ரூ.15 இலட்சம் கோடிக்கு பட்ஜெட் போடும் மத்திய அரசால், பிரதமர் அடிக்கல் நாட்டிய மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ. 2,000 கோடி ஒதுக்க முடியவில்லை.
இலங்கையில் 13 வது சட்டத் திருத்தத்தை அமுல்ப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
ரூ.15 லட்சம் அனைவருக்கும் வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்தனர். ஆனால். இதுவரை ரூ.15 கூட தரவில்லை.
பெரும்பான்மை மக்களை வைத்து சிறுபான்மையின மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. முன்பு குஜராத்தில் நடந்தது போல இப்போது மணிப்பூரில் நடக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment