121 பொலிஸ் நிலையங்களின் வாடகை மற்றும் பராமரிப்பு செலவு 11 கோடி ரூபா - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 2, 2023

121 பொலிஸ் நிலையங்களின் வாடகை மற்றும் பராமரிப்பு செலவு 11 கோடி ரூபா

(எம்.எம்.சில்வெஸ்டர்)

இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் வாட‍கை அடிப்ப‍டையில் காணப்படுகின்ற 121 பொலிஸ் நிலையங்களின் வாடகை மற்றும் அதன் பராமரிப்பு செலவுகளுக்காக அரசாங்கம் வருடாந்தம் 11 கோடி ரூபாவுக்கும் அதிகமான நிதியை செலவிட்டு வருவதாக பொலிஸ் முகாமைத்துவப் பிரிவின் தரவுகள் தெரிவிக்கின்றன.

நாடளாவிய ரீதியில் 607 பொலிஸ் நிலையங்கள் உள்ளதாகவும் அவற்றில் 121 பொலிஸ் நிலையங்கள் வாடகை அடிப்படையில் எடுக்கப்பட்ட தனியார் கட்டடங்களில் இயங்கி வருவதாகவும் தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

தனியார் கட்டடங்களில் இயங்கி வரும் மேல் மாகாண பொலிஸ் நிலையங்களுகக்காக மாதாந்தம் 50 இலட்சம் ரூபாவும், மத்திய மாகாணத்துக்கு 9 இலட்சம் ரூபாவும், வட மத்திய மாகாணம் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கு தலா 8 இலட்சம் ரூபாவும், வட மேல் மாகாணத்துக்கு 7 இலட்சம் ரூபாவும் வாடகைக்காக செலவிடப்பட்டு வருகிறது.

இவ்வாறு வாடகை அடிப்படையில் இயங்கி வரும், தென் மாகாண மற்றும் ஊவா மாகாண பொலிஸ் நிலையங்களுக்கு தலா 5 இலட்சம் ரூபாவும், வட மாகாண பொலிஸ் நிலையங்களுக்கு 2 இலட்சத்து 94 ஆயிரம் ரூபாவும், கிழக்கு மாகாணத்திலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு 2 இலட்சத்து 33 ஆயிரம் ரூபாவும் செலவிடப்பட்டு வருவதாக அந்த தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment