நாளை (15) முதல் 50 கிலோ கிராம் அடிக்கட்டு பசளையின் (MOP) விலையை ரூ. 1,000 இனால் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதன்படி, விவசாய சேவை நிலையங்களினால் தற்போது 15,000 ரூபாவாக விற்பனை செய்யப்படும் எம்ஓபி உரத்தின் விலை நாளை (15) முதல் ரூ. 14,000 ஆக குறைக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
ரூ. 22,000 இற்கும் அதிக விலையில் இருந்த MOP உரத்தின் விலை, கடந்த பெரும் போகத்தில் அரசாங்கத்தினால் ரூ. 19,500 ஆக குறைக்கப்பட்டது.
அத்துடன், சிறுபோகத்தின் ஆரம்பத்தில் உரத்தின் விலையை மேலும் ரூ. 4,500 இனால் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.
அதிக விளைச்சலைப் பெறுவதற்கு MOP போன்ற பசளைகளை பயன்படுத்துவது கட்டாயம் என்று விவசாய வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர், ஆனால் கடந்த போகத்தில் விவசாயிகள் பயன்படுத்திய MOP உரத்தின் அளவு 6% ஆக இருந்ததாக விவசாய அமைச்சு தெரிவித்திருந்தது.
அரசாங்கம் குறித்த உரங்களை கொள்வனவு செய்வதற்கான மானியமாக விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டயருக்கு ரூ. 20,000, 2 ஹெக்டயருக்கு ரூ. 40,000 என வவுச்சர்கள் மூலம் வழங்கியிருந்தது.
சிறந்த அறுவடைக்கு, அந்த பணத்தைப் பயன்படுத்தி MOP உரங்களை கொள்வனவு செய்வதற்கு அதிக முன்னுரிமை வழங்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாயிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment