(எம்.வை.எம்.சியாம்)
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் ஒரு இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக சென்றுள்ளனர்.
மேலும், கடந்த ஜூன் மாதம் தொழிலாளர்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற நேரடி அந்நிய செலாவணி 476 மில்லியன் அமெரிக்க டொலர் வரையில் உயர்வடைந்துள்ளது.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் ஒரு இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக சென்றுள்ளனர்.
மேலும், இவர்களில் அதிகமானோர் மத்திய கிழக்கு நாடுகளுக்கே சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்தார்.
இந்த வருடத்தின் இறுதி பகுதிக்குள் 3 இலட்சத்துக்கும் அதிகமானோர் வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிமித்தம் செல்வார்கள் என எதிர்பார்க்கலாம்.
மேலும், வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து பயணித்தவர்கள் மாத்திரமே இதில் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, இந்த வருடம் ஜூன் மாதம் தொழிலாளர்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற நேரடி அந்நிய செலாவணி 476 மில்லியன் அமெரிக்க டொலர் வரையில் உயர்வடைந்துள்ளது.
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தனது டுவிட்டர் பதிவில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் குறித்த பெறுமதி 274 மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது.
இந்நிலையில், வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டுக்கு கிடைக்கப் பெற்ற நேரடி வெளிநாட்டு அந்நியச் செலாவணி 2,823 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
No comments:
Post a Comment