ஹஜ் கடமைக்காக சென்ற மூன்று இலங்கையர்கள் மரணம் - News View

About Us

About Us

Breaking

Thursday, July 6, 2023

ஹஜ் கடமைக்காக சென்ற மூன்று இலங்கையர்கள் மரணம்

மக்கா மற்றும் மதீனாவில் ஹஜ் யாத்திரையின் போது இந்த வருடம் மூன்று இலங்கை யாத்திரீகர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஹஜ் கடமைக்காக சென்ற மூன்று இலங்கையர்கள் அங்கு மரணித்தமையை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. 

புனித ஹஜ் கடமைக்காக இலங்கையில் இருந்து சென்ற இருவர் கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளனர். கொலன்னாவையைச் சேர்ந்த ஹாஜியானி ஒருவர் மாரடைப்பு காரணமாக மக்காவில் மரணித்துள்ளார். கொழும்பைச் சேர்ந்த ஹாஜி ஒருவர் மதீனாவில் புதன்கிழமை இடம்பெற்ற விபத்தொன்றின்போது மரணித்துள்ளார். குருணாகலை, பானகமுவ பகுதியைச் சேர்ந்த ஹாஜி ஒருவர் கடந்த வாரம் மாரடைப்பு காரணமாக மினாவில் உயிரிழந்துள்ளாரென்பதை திணைக்களம் உறுதி செய்துள்ளது. 

இந்த வருடம் இலங்கையிலிருந்து சுமார் 3,500 பேர் ஹஜ் கடமைக்காக சென்றனர்.

No comments:

Post a Comment