எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நாவலடி ஆயுர்வேத மத்திய மருந்தகத்தில் இடமாற்றம் பெற்றுச் செல்லும் வைத்தியர்களுக்கான பிரியாவிடை நிகழ்வும், பகல் போசன விருந்துபசாரமும் நடைபெற்றது.
07.07.2023 (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இந்நிகழ்வுக்கு நாவலடி ஆயுர்வேத மத்திய மருந்தக பொறுப்பதிகாரி வைத்தியர் எம்.ரிக்காஷ் தலைமை தாங்கினார்.
இதில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் கடமை புரிந்து வந்த வைத்தியர் எஸ்.எப். பஸ்னா பேகம் பொரளை ஆயுர்வேத போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லுகிறார்.
நாவலடி ஆயுர்வேத மத்திய மருந்தகத்தில் கடமை புரிந்து வந்த வைத்தியர் எம்.ரிக்காஷ் பேத்தாளை ஆயுர்வேத மத்திய மருந்தகத்திற்கு இடமாற்றம் பெற்றுச் செல்கின்றார்.
பேத்தாளை ஆயுர்வேத மத்திய மருந்தகத்தில் கடமை புரிந்து வந்த வைத்தியர் எஸ். குமுதினி யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றம் பெற்றுச் செல்கின்றார்.
இந்நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட சுதேச மருத்துவ திணைக்கள இணைப்பாளரும், சித்த ஆயுர்வேத ஆதார வைத்தியசாலை, புதுக்குடியிருப்பு வைத்திய அத்தியட்சகருமான திருமதி பாஷ்கரன் சிறப்பு அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் மேலும், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் கடமை புரியும் வைத்தியர் எம்.நிம்ஷாத், கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் கடமை புரியும் வைத்தியர் எம்.முபாஷ், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜே. சபீர் மற்றும் ஏனையோரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வு நாவலடி ஆயுர்வேத மத்திய மருந்தகத்தின் வைத்திய பொறுப்பதிகாரி மற்றும் ஊழியர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment